கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Saturday 10 August 2013

கொடிச்சீலைக்கான காளாஞ்சி நிகழ்வு-1


கொடிச்சீலைக்கான காளாஞ்சி  நிகழ்வுகொடிச்சீலைக்கான காளாஞ்சி  நிகழ்வு

கொடிச்சீலைக்கான காளாஞ்சி நிகழ்வு

யாழ். நல்லூர் கந்தனின் வருடாந்த திருவிழா எதிர்வரும் வாரம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் அதனை முன்னிட்டு பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு முறைகள் நல்லூர் ஆலயத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்கமைவாக, இன்று வியாழக்கிழமை கொடிச்சீலைக்கான காளாஞ்சி எடுத்துச் செல்லல் நிகழ்வு நடைபெற்றது.
நல்லூரின் புராதான கலாசார விழுமியங்களில் ஒன்றான இந்நிகழ்வு நல்லூர் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக பண்டைய காலம் முதல் இடம்பெற்று வருகிறது.
அதாவது, வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்பு பந்தற்கால் நாட்டுதல் மற்றும் கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி அவர்களின் இல்லங்களிற்கு சென்று வழங்குதல் இதில் முக்கிய நிகழ்வுகளாகும்.
ஆரம்ப காலத்தில் கொடிசீலைக்கான காளாஞ்சியானது குதிரை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. எனினும் கடந்த நூறு வருடங்களிற்கு மேலாக இந்த நடைமுறை மாற்றப்பட்டிருந்தது.
நாட்டில் நிலவிய அசாதாரண சூழலை தொடர்ந்து இப்பாரம்பரியம் மறைக்கப்படிருந்தது. பலரிக்கு இது தெரியாதிருந்தது.
இந்நிலையில், இவ்வருடம் நல்லூர்க்கந்தனின் திருவருள் கைகூடியதற்கமைவாக ஆலய நிர்வாகத்தினர் எடுத்துக் கொண்ட முயற்சியினால் மாட்டு வண்டியில் கொடிச்சீலைக்கான காளாஞ்சி எடுத்துச் செல்லப்பட்டது
மாட்டு வண்டியில் கொடிச்சிலை வழங்கும் மரபுடையவர்களின் இல்லத்திற்கு சென்று சிவசுப்பிரமணிய வைகுந்தவாசக்குருக்களும் சிவஸ்ரீ மாணிக்கக்குருக்களும் இணைந்து நல்லூர் கந்தனிற்கு கொடிச்சிலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி வழமை போல் உரியவர்களிற்கு வழங்கப்பட்டது


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.