கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Friday 30 September 2011

நல்லூர்


நல்லூர்,


நல்லூர்

http://nalluran.com/images/3.jpg

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday 29 September 2011

பஞ்சபுராணம்-2

தேவாரம்


செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வ வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்தும் செல்வஞ் செல்வமே.
திருவாசகம்

ஆடு கின்றலை கூத்துi யான் கழற்(கு)
அன்பிலை: என்புருகிப்
பாடு கின்றலை: பதைப்பதும் செய்கிலை
பணிகிலை: பாதமலர்
சூடுகின்றலை: சூட்டுகின் றதுமிலை:
துணையிலி பிணநெஞ்சே!
தேடுகின்றலை தெருவுதோ றலறிறை:
செய்வ தொன்ற றியேனே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே ! உலப்பிலா ஒன்றே !
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !
சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே !
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்தொண்டனேன் விளம்புமா விளம்பே !


திருப்பல்லாண்டு

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனி எல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன
அடியோமுக்கு அருள்புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.

பெரிய புராணம்

உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்:
அலகில் சோதியன்: அம்பலத்து ஆடுவான்:
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.

திருச்சிற்றம்பலம்

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday 28 September 2011

முத்திநெறி அறியாத


புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday 27 September 2011

சிறையாரும் மடக்கிளியே


செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday 26 September 2011

சொற்றுணை வேதியன் சோதிவானவன்


திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday 25 September 2011

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்

 மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday 24 September 2011

Friday 23 September 2011

பிள்ளையார் பாடல்கள்

கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக கணபதி சரணம் சரணம்
தலைவனின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவ சிவ சரணம் சரணம்
உலைவரு மொருபரை சரணம் சரணம்
உமைசிவ அம்பிகை சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவேல் அரசே சரணம் சரணம்
மயிலூர் மணியே சரணம் சரணம்
அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாய் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday 22 September 2011

அறுகம்புல்லின் சிறப்பு -7

தொடர்ச்சி
அரசன் கூறியதை கேட்ட காவலாளிஅரண்மனையின்
தானியக்கிடங்குஇருக்கும் இடத்திற்கு சென்றான்.
அதன் பின்பு அங்கு கணக்குகளைபார்த்துகொண்டிரு
க்கும் கணக்குபிள்ளையிடம் "ஜயா" அரசர்என்னிடம்
 "அந்தணரின் பசியைநான் போக்கவேண்டும்" ஆகவே
நீ தானியக்கிடங்கினுள் இருக்கும்இடத்திற்கு சென்று
அங்கு இருக்கும் கணக்குப்பிள்ளையிடம் நான் கூறிய
தாக கூறி அந்தணரின் பசிக்குபரிமாற போதுமான
அளவு உணவினைதயாரிக்க தேவையான சகல ´
பொருட்களையும் கணக்குப் பிள்ளைஇடம் பெற்றுக்
கொண்டு வந்துசமையல் செய்யும் இடத்தில் கொடுத்து
உடனடியாக கொடுத்துசமையல் செய்து எடுத்து வந்து
அந்தணருக்கு பரிமாறு கூறினார்.ஆகவே நீங்கள் எனக்கு
தேவையான சகல சமையல் பொருட்களையும் உடனே
தாருங்கள். நான்உடனடியாக அந்தணருக்குரிய உணவி
னை சமைக்க தேவையான பொருட்களை கொண்டு
சென்றுகொடுக்க வேண்டும் என்றான் இதைக் கேட்ட
கணக்குப்பிள்ளை திகைத்தார் .
தொடர்ச்சி

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday 21 September 2011

புத்தசமய பன்சாலை ஸ்ரீலங்கா





இஸ்லாமிய பள்ளிவாசல்




கிறிஸ்தவ சமயம்




புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday 20 September 2011

அறுகம்புல்லின் சிறப்பு -6

காவலாளி கூறியதைக் கேட்ட அரசனுக்கு என்ன செய்வது 
என்று தெரியவில்லை உடனே அரசன் வந்திருந்த அந்தணரின் 
முகத்தை பார்த்தார் ஆனால் வந்திருந்த அந்தனரோ எனக்கு 
மிகமிக பசியாக இருக்கிறது ஆகவே எனக்கு இன்னும் 
உணவு தேவையாக இருக்கிறது என்றார் அந்தணரின் கூறியதை 
கேட்ட  பின்பு  அரசன் சிறிது நேரம் யோசித்தான் அதன் பின்பு 
காவலாளியிடம் திரும்பி எனது அரண்மனையின் தானியக்
கிடங்கில் உள்ள தானியங்களில்  தேவையானளவு எடுத்து வந்து 
சமைக்கும்படி கூறினான் .

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday 19 September 2011

அறுகம்புல்லின் சிறப்பு -5

தொடர்ச்சி
அதன் பின்பும் அந்தணர் அரசரிடம் நீங்கள் எனக்கு
கொடுத்த உணவு போதவில்லை எனக்கு மிக மிக
பசியாக இருக்கின்றது ஆகவே இன்னும் உணவும்
எனக்கு தேவையாக இருக்கின்றது உங்களால் தர
முடியுமா எனக் கேட்டார் அதற்கு அரசரும் உடனே
உங்கள் பசியை போக்க தேவையான உணவை
என்னால் தர முடியும் எனக்கூறினார் அதற்கு
அந்தணர் நன்றி எனக்கூறினார் அதன் பின்பு அரசர்
காவலாளியை பார்த்துஅந்தணருக்கு மிகவும் பசியாக
இருக்கிறதாம் தற்போது நாங்கள் கொடுத்த உணவு
போதவில்லையாம்ஆகவே இன்னும் அவருடைய
பசியை போக்க தேவையான உணவை கொண்டு
வந்து கொடுக்கும்படி கட்டளை இட்டார் அரசனின்
கட்டளைப்படி அந்தணருக்கு உணவுகளை கொண்டு
வந்துகொடுத்தான் அரச மாளிகையில் சமைக்கப்
பட்டிருந்தஉணவுகள் யாவும் முடிந்து விட்டன
ஆனால் அந்தணரின்பசியோ அடங்கவில்லை அவன்
அரசரிடம் அரச மாளிகையில் சமைக்கப்பட்டிருந்த
உணவுகள் யாவும்முடிந்து விட்டது எனக்கூறினான் .

தொடர்ச்சி

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday 18 September 2011

அறுகம்புல்லின் சிறப்பு-4



தொடர்ச்சி
அரசனின் சொற்படி காவலாளியும்அந்தணர் இருந்து 
உண்பதிற்குவசதியாக நிலத்தில் ஓரு பாயை
விரித்தார் அதன் பின்பு அதில்அந்தணரை பாயில் 
அமரும்படிகாவலாளி கூறினான்.காவலாளி
கூறியபடி காவலாளி விரித்தபாயில் அந்தணர் 
அமர்ந்தார்அதன் பின்பு காவலாளி அவர்
முன்பு ஓரு இலையை போட்டுஅந்தணருக்கு உணவு
பரிமாறினான்,அந்தணரின் இலையில் இருந்த முழு
உணவையும் கணப்பொழுதில்அந்தணர் சாப்பிட்டு 
முடித்து விட்டார்.ஆனால் அந்தணரின் பசி போகவில்லை .

தொடர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday 17 September 2011

அறுகம்புல்லின் சிறப்பு-3



தொடர்ச்சி 
அதனைக் கேட்டு யாசகம் பெற வந்திருந்த 

அந்தணர் மகிழ்ச்சி அடைந்தார்.அதன் பின்பு 
அந்தணர் அரசன் முன் சென்றார். அந்தணரைக் 
கண்ட அரசன் அந்தனரிடம் உமக்கு என்ன 

வேண்டும்? என்று கேட்டார்.அதற்கு வந்த 
அந்தனரோ எனக்கு மிக மிக பசியாக 
இருக்கின்றது.ஆகவே எனது பசிக்கு உணவு 
வேண்டும் என்றார்.மன்னரும் தனது

காவலாளிகளை அழைத்து பசியோடு 
வந்திருக்கும் இந்த அந்தணருக்கு 
தேவையான உணவை பரிமாறச்
சொன்னான் .

(தொடர்ச்சி)

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday 15 September 2011

Wednesday 14 September 2011

வீரமாகாளி அம்மன் ஆலயம் யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா





ஸ்ரீ-லங்காவின் வட மாகாணத்தில் உள்ள
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வீரமாகாளி
அம்மன் ஆலயத்தில் உள்ள அம்மன்.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday 13 September 2011

வெள்ளைத் தேவாலயம் - பிரான்ஸ்


செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday 12 September 2011

Sunday 11 September 2011

அறுகம்புல்லின் சிறப்பு-2

தொடர்ச்சி 
வாயிற் காவலர்கள் அவரின் தோற்றத்தை பார்த்து 

அரண்மனைக்கு உள்ளே செல்ல அவருக்கு அனுமதி 
கொடுக்கவில்லை.ஆனால் வந்த அந்தனரோ எனக்கு 
பசியாக இருக்கிறது ஆகவே தான் நான் மகாராஜாவை
பார்த்து அவரிடம் எனது பசிக்காக யாசகம் பெறவே 

வந்தேன் என்றார் அதற்கும் காவலாளி அந்த அந்தணரை 
உள்ளே அனுமதிக்கவில்லை எவ்வளவோ கெஞ்சிக்
கேட்டும் காவலாளி அவரை உள்ளே அனுமதிக்கவில்லை 
அதன் பின்பு அந்த அந்தணர் நான் உள்ளே சென்று 
மகாராஜாவை பார்த்து யாசகம் பெற தான் நீங்கள் எனக்கு 

அனுமதி தரவில்லை நான் இந்த அரண்மனையின் வாசலின் 
அருகில் நிற்கிறேன் நீங்களாவது உள்ளே சென்று மகா
ராஜாவிடம் நான் எனது பசிக்காக யாசகம் பெற வந்திருப்பதாக 
கூறுங்கள் அதற்கு மகாராஜா உங்களிடம் எனது பசியை தீர்க்க 
ஏதாவது தந்தார் என்றால் அதனை என்னிடம் கொண்டு வந்து 
தாருங்கள் நீங்கள்செய்யும் இந்தஉதவியை நான் எனது 

வாழ்க்கையில் ஒரு நாளும் மறக்கமாட்டேன் அத்துடன் நீங்கள் 
எனக்கு செய்யும் இந்த உதவிக்காக ஏதாவது சந்தர்ப்பத்தில்
உங்களுக்கு உதவி தேவையான போது என்னால் உங்களுக்கு 
உதவி செய்ய முடியாவிடாலும் எனக்கு பதிலாக வேறு 
ஒருவர் நிச்சயம் செய்வார் எனக்கூறினார் இதனை கேட்ட 

காவலாளி அவரின் நிலையை அறிந்து உள்ளே அரசனிடம் 
சென்று பசியோடு அந்தணர் ஒருவர் வந்திருப்பதாக கூறினார். 
இதனை கேட்ட அரசன் ஆச்சரியம் அடைந்தான் அதற்கு 

காரணம் இதுவரை யாரும் தங்கள் உடைய பசிக்காக தன்னிடம் 
யாசங் கேட்டு வரவில்லை என்பதேயாகும்.அதன் பின்பு அரசன் 
காவலாளியிடம் நீ உடனே சென்று யாசம் கேட்டு வந்தவரை 
அழைத்து வா என்று கட்டளையிட்டான். அரசனின் கட்டளைப்படி 
காவலாளி அரண்மனை வாயிலை அடைந்து யாசம் கேட்டு 
வந்தவரிடம் சென்று எங்களுடைய மகாராஜா தங்களை உள்ளே 
வரும்படி அழைப்பதாக கூறினான்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday 10 September 2011

அறுகம்புல்லின் சிறப்பு-1



மிதிலாபுரி என்ற நாட்டை ஜனகமகாராஜா என்ற
அரசன் ஆட்சிபுரிந்தான் .அவன் நற்குணங்களும்
நல்லியல்புகளும் உடையவன்ஆனால் தன்னை
விட மேலானவேறு எந்தபரம்பொருளும்இல்லை
என்ற அகந்தையுடையவனாகஇருந்தான் அது
தான் அவனிடமிருந்தஒரே ஒரு கூடாத குணமாகும் .
ஜனகனின் இந்த அகங்கார குணத்தை கண்ட
விநாயகபெருமாள் ஜனகனிடம் இருந்த இக்குணத்தை
நீக்கி அவனை நல்வழிப்படுத்த திருவுளங் கொண்டார் .
பெரு நோய உடைய ஒரு அந்தணரை போல வடிவ
மெடுத்து ஜனக மாகராஜனின் அரண்மனை வாயிலை
அடைந்தார் .

(தொடரும் )

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday 9 September 2011

முருகன் பாடல்கள்

அன்பருக்கு அன்பனே நீ வாவா முருகா
ஆறுபடை வீடுடையாய் வாவா முருகா
இன்பமய ஜோதியே நீ வாவா முருகா
ஈசனுமாய் பாலகனே வாவா முருகா
உலகநாதன் மருமகனே வாவா முருகா
ஊமைக் கருள் புரிந்தவனே வாவா முருகா
எட்டுக்குடி வேலவனே வாவா முருகா
ஏறு மயில் ஏறியே நீ வாவா முருகா
ஜங்கரனுக் கிளையவனே வாவா முருகா
ஆறுமுக வேலவனே வாவா முருகா
ஒய்யாரி வள்ளி லோலா வாவா முருகா
ஓங்கார தத்துவமே வாவா முருகா
ஔவைக்குப தேசித்தவனே வாவா முருகா
அகில லோக நாயகனே வாவா முருகா
ஓடிவா நீ ஓடிவா நீ வாவா முருகா
ஆடிவா நீ ஆடிவா நீ வாவா முருகா

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday 8 September 2011

உலகில் மிக உயரமான கிறிஸ்த தேவாலய கோபுரம் .


இதன் உயரம் 161,53 மீற்றர் இது ஜேர்மனியில் உள்ள 
உல்ம் என்ற இடத்தில் உள்ள கதிட்ரல் கிறிஸ்தவ
தேவாலய கோபுரமாகும் அத்துடன் இந்த கிறிஸ்தவ 
தேவாலயம் 19 ம்  நூற்றாண்டில் கட்டபட்டது(1890 -1901)

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday 7 September 2011

பிளையார் பாடல் -சைவசமயம்

(1)
ஜந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

(2)
பொற்சதங்கை குலுங்கவரும் பாலகணபதி
பொங்கும் இன்பம் தந்தருள்வாய் எந்தநாளுமே
தருணத்தில் நமைக்காப்பார் தருண கணபதி
சங்கடங்கள் நீக்கிவைப்பார் சதுர்த்தி கணபதி

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday 6 September 2011

இஸ்லாமிய பள்ளிவாசல்

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday 5 September 2011