கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Sunday 11 September 2011

அறுகம்புல்லின் சிறப்பு-2

தொடர்ச்சி 
வாயிற் காவலர்கள் அவரின் தோற்றத்தை பார்த்து 

அரண்மனைக்கு உள்ளே செல்ல அவருக்கு அனுமதி 
கொடுக்கவில்லை.ஆனால் வந்த அந்தனரோ எனக்கு 
பசியாக இருக்கிறது ஆகவே தான் நான் மகாராஜாவை
பார்த்து அவரிடம் எனது பசிக்காக யாசகம் பெறவே 

வந்தேன் என்றார் அதற்கும் காவலாளி அந்த அந்தணரை 
உள்ளே அனுமதிக்கவில்லை எவ்வளவோ கெஞ்சிக்
கேட்டும் காவலாளி அவரை உள்ளே அனுமதிக்கவில்லை 
அதன் பின்பு அந்த அந்தணர் நான் உள்ளே சென்று 
மகாராஜாவை பார்த்து யாசகம் பெற தான் நீங்கள் எனக்கு 

அனுமதி தரவில்லை நான் இந்த அரண்மனையின் வாசலின் 
அருகில் நிற்கிறேன் நீங்களாவது உள்ளே சென்று மகா
ராஜாவிடம் நான் எனது பசிக்காக யாசகம் பெற வந்திருப்பதாக 
கூறுங்கள் அதற்கு மகாராஜா உங்களிடம் எனது பசியை தீர்க்க 
ஏதாவது தந்தார் என்றால் அதனை என்னிடம் கொண்டு வந்து 
தாருங்கள் நீங்கள்செய்யும் இந்தஉதவியை நான் எனது 

வாழ்க்கையில் ஒரு நாளும் மறக்கமாட்டேன் அத்துடன் நீங்கள் 
எனக்கு செய்யும் இந்த உதவிக்காக ஏதாவது சந்தர்ப்பத்தில்
உங்களுக்கு உதவி தேவையான போது என்னால் உங்களுக்கு 
உதவி செய்ய முடியாவிடாலும் எனக்கு பதிலாக வேறு 
ஒருவர் நிச்சயம் செய்வார் எனக்கூறினார் இதனை கேட்ட 

காவலாளி அவரின் நிலையை அறிந்து உள்ளே அரசனிடம் 
சென்று பசியோடு அந்தணர் ஒருவர் வந்திருப்பதாக கூறினார். 
இதனை கேட்ட அரசன் ஆச்சரியம் அடைந்தான் அதற்கு 

காரணம் இதுவரை யாரும் தங்கள் உடைய பசிக்காக தன்னிடம் 
யாசங் கேட்டு வரவில்லை என்பதேயாகும்.அதன் பின்பு அரசன் 
காவலாளியிடம் நீ உடனே சென்று யாசம் கேட்டு வந்தவரை 
அழைத்து வா என்று கட்டளையிட்டான். அரசனின் கட்டளைப்படி 
காவலாளி அரண்மனை வாயிலை அடைந்து யாசம் கேட்டு 
வந்தவரிடம் சென்று எங்களுடைய மகாராஜா தங்களை உள்ளே 
வரும்படி அழைப்பதாக கூறினான்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.