கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Thursday 29 September 2011

பஞ்சபுராணம்-2

தேவாரம்


செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வ வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்தும் செல்வஞ் செல்வமே.
திருவாசகம்

ஆடு கின்றலை கூத்துi யான் கழற்(கு)
அன்பிலை: என்புருகிப்
பாடு கின்றலை: பதைப்பதும் செய்கிலை
பணிகிலை: பாதமலர்
சூடுகின்றலை: சூட்டுகின் றதுமிலை:
துணையிலி பிணநெஞ்சே!
தேடுகின்றலை தெருவுதோ றலறிறை:
செய்வ தொன்ற றியேனே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே ! உலப்பிலா ஒன்றே !
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !
சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே !
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்தொண்டனேன் விளம்புமா விளம்பே !


திருப்பல்லாண்டு

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனி எல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன
அடியோமுக்கு அருள்புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.

பெரிய புராணம்

உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்:
அலகில் சோதியன்: அம்பலத்து ஆடுவான்:
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.