கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Saturday 24 August 2013

சப்பரத்தின் வெள்ளோட்டம் 2013

250 வருடங்களிற்கு மேல் பழமையான இலங்கையிலே அதி உயரமான அசையும் கட்டுமானப்பொருளாகிய ஸ்ரீ நல்லூர்கந்த சுவாமி கோயிலின் சப்பரத்தின் வெள்ளோட்டம். இந்தியாவில் உள்ள கட்டுமானத் தேர் இது தான் உலகின் அதியுயரமான அசையும் கட்டுமானப்பொருள் அதற்கு அடுத்தபடியா இலங்கையின் நல்லூர்கந்த சுவாமி கோயிலின் சப்பரம் தான் உலகின் இரண்டாவதும் மிகப்பழமையுமான அதியுயரமான அசையும் கட்டுமானப்பொருள் ஆகும். இது 250 வருடங்களிற்கு மேல் நல்லூர் கந்தனிற்கு சேவை செய்ததால் இதன் சில்லுகள் புதிப்பிக்கப்பட்டு இன்று 2013 13ம் திருவிழாவன்று வெள்ளோட்டம் விடப்பட்டது. இது உருவான கதை வியக்கத்தக்கது. முன்னொரு காலம் நல்லூரிற்கு சப்பரதம் உருவாக்க எண்ணியபோது சிவலிங்கச்செட்டியார் என்பவர் இந்த சின்ன வேல்ப்பெருமானிற்கு பெரிய சப்பரம் தேவையா என வினாவினார். அன்று அவரது கனவில் வேல்ப்பெருமான் விஸ்வரூபம் எடுத்து தனது முழுத் தோற்றத்தை சிவலிங்கச்செட்டியாரிற்கு காண்பித்தார். இதன் மூலமே ஸ்ரீ நல்லூர்கந்த சுவாமி கோயிலின் சப்பரம் வேல்ப்பெருமானின் அருளுடன் மிகப் பிரமாண்டமாக அமைந்தது. இன்று வேல்ப்பெருமானின் முழுத் தோற்றத்தை சப்பரத்தின் மேல் பகுதியில் கண்ணாடி மூலம் காண்பிக்கப்படுகிறது. நன்றி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.