கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலூர்


பாடல் எண் : 11

புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புகலூரைக்
கற்றுநல்லவவர் காழியுண்ஞானசம் பந்தன்றமிழ்மாலை
பற்றியென்றும்இசை பாடியமாந்தர் பரமன்னடிசேர்ந்து
குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலிவாரே.

பொழிப்புரை :

புற்றில் வாழும் பாம்புகளை இடையிலே கட்டியவனாகிய 
சிவபிரான் எழுந்தருளிய புகலூர்மீது இறைவனது பொருள்
சேர் புகழைக்கற்று வல்லவர்கள் வாழும் சீகாழிப் பதியில் 
தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ ்மாலையாகிய 
இத்திருப்பதிகத்தை, என்றும் இசையோடு பாடி வழிபடும் 
மாந்தர்கள் இறைவன் திருவடி நீழலை அடைந்து குற்றம் 
குறைபாடு அகன்று புகழோங்கிப் பொலிவெய்துவார்கள்.

குறிப்புரை :

பாம்பு என்ற பொதுமை பற்றி, யாகத்திலிருந்து வந்த இந்தப் 
பாம்புகளையும் `புற்றில் வாழும் அரவம்` என்றார். சாதியடை. 
மேவும் - விரும்பும். கற்று நல்ல அவர் - இறைவன் புகழைப் 
படித்து நல்லவராயினார்கள். குற்றம் - சொல்லான் வருங்குற்றம்.
 குறை - சிந்தனையால் வரும் தோஷம். ஞானசம்பந்தன் 
புகலூரைச் (சொன்ன) தமிழ ்மாலை பற்றி, பாடிய மாந்தர் 
பொலிவார் என இயைத்துப் பொருள்கொள்க. `கற்று நல்ல அவர் 
காழி` என்றது `கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள் ஈசன்` 
என்ற பகுதியை நினைவூட்டுவது. ஒழியா - ஒழிந்து; செய்யா 
என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.