கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலூர்


பாடல் எண் : 9

நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடியார்கள்
ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழுதேத்த
ஏகம்வைத்தவெரி யாய்மிகவோங்கிய எம்மானிடம்போலும்
போகம்வைத்தபொழி லின்னிழலான்மது வாரும்புகலூரே.

பொழிப்புரை :

பாம்பை முடிமிசை வைத்துள்ளவனும், தன் திருவடிகளைப் 
போற்றும் அடியார்கள், தம் மனத்தின்கண் வைத்துப் போற்றும் 
தலைவனும், பிரமனும், திருமாலும் தொழுதேத்த ஏகனாய் எரி 
வடிவில் மிக ஓங்கிய எம்மானுமாகிய இறைவனுக்கு மிக உகந்த 
இடம், பல்வகைப் பயன்களையும் தருவதோடு நிழலாற் சிறந்த
தாய்த் தேன்நிறைந்து விளங்கும் பொழில் சூழ்ந்த புகலூராகும்.

குறிப்புரை :

அடியார்கள் ஆகம்வைத்த பெருமான் - அடியார்களைத் தமது
 திருவுள்ளத்து இடம்பெறவைத்த பெருமான், அடியார்கள் தமது
 நெஞ்சத்தில்வைத்த பெருமான் என்றுமாம். ஏகம்வைத்த எரி - 
ஒன்றான தீப்பிழம்பு, போகம்வைத்த பொழில் என்றது தனிமகன் 
வழங்காப் பனிமலர்க்கா என்றது போல இன்பச்சிறப்பு அறிவித்தவாறு.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.