கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Tuesday 16 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலியும் திருவீழிமிழலையும்

பாடல் எண் : 10
பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த பான்மைய தன்றியும் பல்சமணும்
புத்தரு நின்றலர் தூற்றவந்தண் புகலி நிலாவிய புண்ணியனே
எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற வெம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

பொழிப்புரை :
தன்னிடம் பத்திமையுடையோர் பணிந்து போற்றும் பான்மையோடுகூடச் சமணரும், புத்தரும் அலர் தூற்ற, அழகிய குளிர்ந்த புகலியின்கண் விளங்கும் புண்ணியனே! எவ் வகையான தவத்தை மேற்கொண்டோரும் அடைதற்குரிய இலக்காய் நின்ற எம்பெருமானே! சதுரப்பாடுடைய அறிஞர்கள் வாழும் பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.


குறிப்புரை :
பத்தர்கணம் ஏத்த வாய்த்த பான்மையது அன்றியும்-அடியார்கள் தோத திரிக்கப் பொருந்திய தோடல்லாமல். புறச் சமயத்தார் அலர் தூற்றவும் நிலவிய புண்ணியன் என்க. எத்தவத்தோர்க்கும் - ஹடயோகம், சிவயோகம் ஆகிய எத்தகைய தவத்தினையுடையவர்க்கும், இலக்காய் - அவரவர் நிலைக்கேற்பக் குறித்துணரததக்க பொருளாய்,வித்தகர்-சதுரப்பாடுடைய வர்கள்; ஞானிகள்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.