கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Tuesday 16 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலியும் திருவீழிமிழலையும்

பாடல் எண் : 8
இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோள் இற்றல றவ்விர லொற்றியைந்து
புலங்களைக் கட்டவர் போற்றவந்தண் புகலி நிலாவிய புண்ணியனே
இலங்கெரி யேந்திநின் றெல்லியாடு மெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

பொழிப்புரை :
இலங்கையர் தலைவனாகிய இராவணன் அழகிய வலிய தோள்கள் ஒடிந்து, அலறுமாறு தன் கால் விரலால் சிறிது ஊன்றி, ஐம்புல இன்பங்களைக் கடந்தவர்களாகிய துறவியர் போற்ற, அழகிய தண்மையான புகலியில் விளங்கும் புண்ணியனே! விளங்கும் தீப்பிழம்பைக் கையில் ஏந்தி இரவில் இடுகாட்டில் ஆடும் எம் தலைவனே! மலை போன்ற ஒளி பொருந்திய மாளிகைகளால் சூழப்பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.

குறிப்புரை :
புலங்களைவெல்லாத இராவணனையலறச் செய்து புலன்களை வென்ற வர்கள் போற்ற இருக்கும் புகலியான் என நயந்தோன்றக்கூறியவாறு, இற்று - ஒடிந்து,விரல் ஒற்றி - காற்பெருவிரலால் சிறிது ஊன்றி. புலன்களை கட்டவர்-புலனகளாகிற களைகளைக்களைந்தவர்.எல்லி -இரவு.விலங்கல் - மலை.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.