கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலூர்

பாடல் எண் : 8
தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடிதிண்டோள்
தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள்செய்த
மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிடமென்பர்
பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புகலூரே.

பொழிப்புரை :

அழகிய இலங்கை அரசனாகிய இராவணன் கயிலை மலையை 
இரு கரங்களாலும் பற்றி எடுத்தபோது அவனுடைய தலைகள், 
திண்ணியதோள்கள் ஆகியவற்றைத் தன்கால் விரலால் 
நெரித்துப் பின் அவன் சாமகானம் பாடக்கேட்டு அன்று அவனுக்கு
அருள் செய்தவனாகிய தாழ்ந்த  சடைமுடி உடைய பெருமான் 
தன் தேவியோடு மேவும் இடம், மதிதோயும் அழகிய மாளிகைகள் 
நிறைந்த புகலூராகும்.

குறிப்புரை :

தென் - அழகு, திசைகுறித்ததன்று. வரை - கயிலை; நெரித்து எனாது 
நெரிவித்து என்றது விரலின்செயல் என்பதைத் தெரிவிக்க. இவரே
 நினத்துச் செய்யின் நேரும் தீமை பெரிதாயிருக்கும் என்பது. இசை - 
சாமகானம். பொன்னிலங்கும் மணி மாளிகையின்மேல் மதிதோயும் 
என்பது, புகலூரும் மதிசூடி இறைவனைப் போல் சாரூபம் பெற்றது 
என்பது அறிவித்தவாறு.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.