கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருவலிதாயம்

பாடல் எண் : 2

படையிலங்குகர மெட்டுடையான்படி றாகக்கலனேந்திக்
கடையிலங்குமனை யிற்பலிகொண்டுணுங் கள்வன்னுறைகோயில்
மடையிலங்குபொழி லின்னிழல்வாய்மது வீசும்வலிதாயம்
அடையநின்றவடி யார்க்கடையாவினை யல்லற்றுயர்தானே.

பொழிப்புரை :

படைக் கலங்களை ஏந்திய எட்டுத் திருக்கரங்களை உடைய பெருமானும் 
பொய்யாகப் பலியேற்பது போலப் பிரமக பாலத்தைக் கையில் ஏந்தி 
வீடுகளின் வாயில்களிற் சென்று பலியேற்றுண்ணும் கள்வனும் ஆகிய 
பெருமான் உறையும் கோயிலை உடையதும், நீர்வரும் வழிகள் அடுத்துள்ள
பொழில்களின்நீழலில் தேன்மணம் கமழ்வதுமாகிய வலிதாயத்தைஅடைய 
எண்ணும் அடியவர்களை வினை அல்லல் துயர் ஆகியனவந்தடையமாட்டா.

குறிப்புரை :

இது வலிதாயத்தை அடையும் அடியார்கட்கு வினையில்லை என்றது. 
படிறாக - பொய்யாக. கலனேந்தி - பிரமகபாலத்தைத் திருக்கரத்தில் ஏந்தி; 
என்றதுஉலகமெல்லாவற்றையும் தமக்கு உடைமையாகக் கொண்ட 
இறைவன் பலிகொண்டுண்டான் என்பது பொருந்தாது ஆகலின், அதுவும் 
அவருக்கோர் விளையாட்டு என்பதை விளக்க. படிறாக, ஏந்தி, கொண்டு, 
உண்டுணும் கள்வன் எனக்கூட்டுக. அன்றியும், கள்வனாதற்குப் படிறும் 
இயைபுடைமை காண்க. வினை அல்லல் துயர் - வினை ஏதுவாக வரும் 
அல்லலும் துன்பமும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.