கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலூர்

பாடல் எண் : 7
வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதிசூடி
உள்ளமார்ந்தவடி யார்தொழுதேத்த வுகக்கும்அருள்தந்தெம்
கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுள்ளிடமென்பர்
புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புகலூரே.

பொழிப்புரை :

கங்கைநீர் அடங்கி விளங்கும் செஞ்சடைமேல் விளக்கமான 
பிறைமதியைச்சூடி, தம்மிடம் மனம் ஒன்றிய அடியவர் 
தொழுது ஏத்த அவர்கள் மனம் மகிழும் அருளைப் புரிந்து 
என்னைப் பற்றிய வினையையும் பழியையும் தீர்த்தருளிய 
கடவுள் உறையும் இடம், மீன் கொத்தி முதலிய பறவை 
இனங்கள் மீன்களைக் கவர வந்து தங்கும் வயல்களின் 
விளைவால் வளம் மல்கிய புகலூராகும்.

குறிப்புரை :

வெள்ளம் - கங்கை; வெள்ளம் ஆர்ந்து மிளிர் செஞ்சடை 
என்றது செருக்கால் மிக்ககங்கையை அடக்கியது என்றவாறு. 
விளங்கும் மதிசூடி என்பது இளைத்த மதியை விளங்க 
வைத்தது. இதனால் தருக்கினாரை ஒடுக்குதலும் தாழ்ந்தாரை 
உயர்த்துதலும் இறைவன் கருணை என்பது தெரிவிக்கப்படு
கின்றன. எம் கள்ளம் ஆர்ந்து பழிதீர்த்த கடவுள் - அநாதியே 
பற்றிநிற்கும் எமது ஆணவ மலமாகிய வஞ்சனை நீங்கப் 
`பெத்தான்மாக்கள்` என்னும் பழியைத் தீர்த்த கடவுள். புள் -
 நாரை முதலியன.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.