கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலூர்

பாடல் எண் : 5

செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடியார்மேல்
பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணிவாரை
மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள்பேணிப்
பொய்யிலாதமனத் தார்பிரியாது பொருந்தும்புகலூரே.

பொழிப்புரை :

சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றைப் பூசுபவர். 
தம்மைவந்தடையும் அடியவர்களைத் தாக்கவரும் வினைகளை
நீக்குபவர். என்றும் தம்மைப் பாடிப் பணிவார்க்கு உண்மையானவர். 
அவர் விரும்பி உறையும் இடம், அருளையே விரும்பிப் பொய்
யில்லாத மனத்தவர் நீங்காது வாழும் புகலூர் என்பர்.

குறிப்புரை :

அடியார்மேல் நின்ற வினையைப் பாற்றுவார். பைய - மெதுவாக, 
நோயை விரைந்துநீக்கினால் அதனால் விளையும் தீமைபெரிதாய், 
நோயின்பெருமையும், மருத்துவன்உழைப்பும் அறியப்படாதவாறு
போல, வினைகளைவிரைந்து நீக்கின்விளையுங்கேடு பலவாமாக
லின் பையப்பாற்றுவார் என்றார். பாற்றுதல் - சிதறிப்போகச்செய்தல்.
 பணிவாரை - அடியார்கள் இடத்தில்; வேற்றுமை மயக்கம், மெய்ய 
- உண்மையாக, பொய் - அஞ்ஞானம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.