கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Wednesday 24 August 2011

பஞ்சபுராணம்-, 1

தேவாரம்

கானருகும் வயலருகுங் கழியருகுங் கலரும்
மீனரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய்
தேனமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வானமருஞ் சடையார்க்கென் வருத்தம் சென்று உரையாயே.

திருவாசகம்

வேதமும் கேள்வியும் ஆயினார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்
சோதியு மாய் இருள் ஆயினார்க்குப்
துன்பமு மாய் இன்பம் ஆயினர்க்குப்
பாதியு மாய்முற்றும் ஆயினார்க்குப்
பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு
ஆதியும் அந்தமும் ஆயினாருக்
காடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே.

திருவிசைப்பா

ஏகநாயகனை இமையவர்க் கரசை
என்னுயிர்க் கமுதினை, எதிர்இல்
போகநாயகனைப், புயல்வனற் கருளிப்
பொன்னெடுஞ் சிவிகையா ஊர்ந்த
மேகநா யகனை, மிகு திருவீழி
மிழலை வீண் ணிழி செழுங் கோயில்
யோகநா யகனை யன்றிமற் றொன்றும்
உண்டென உணர்கிலேன் யானே

திருப்பல்லாண்டு

சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த
து}ய்மனத் தொண்டருள்வீர்,
சில்லாண் டிற்சிதை யும்சில தேவர்
சிறுநெறி சேராமே
வில்லாண்டகன கத்திரள் மேரு
விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுர்கே
பல்லாண்டு கூறுதுமே.

பெரியபுராணம்

திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கைதொழுதார்:
பரிவரிய தொண்டர்களும் பணிந்துமனம் களிபயின்றார்:
அருமறைசூழ் திருமன்றில் ஆடுகின்ற கழல்வணங்க
வருகின்றார் திருநாளைப் போவாரம் மறைமுனிவர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.